மார்கழி குளிரில்,அந்தி தொடக்கத்தில்,இரவின் நீட்சியில்,பஞ்சனையின் மீதுயார் அவர்கள் ?காதலின் மகளான அவளும்;காமத்தின் மகனானஅவனும்;விரல் தொட்டு,இதழ் பதித்துஅவள் பெயரைஅவன் உச்சரிக்க,அயரும் தூக்கத்தில்,அவளின் சிணுங்கல்மழைச் சாரலின்பரவசம்.இதழும் இதழும்இணையத் துடிக்க,இடையும் இடையும்இணையா நெருக்கத்தில்,
மார்புச் சூட்டின்
வெப்பம் மிதமாய் பரவி,
இரவுக்கும் மயக்கம்,எல்லாம் ஒரு விதக்கிறக்கம்.இந்நேரத்திலும்ஒரு விவாதம்..சத்தமில்லாஒரு சண்டை..பனியிலும்ஒரு பனிப்போர்..காதலின் முடிவில்காமமா ?காதலா ?விடையறியாமல்விழிக்கும் விழி..விடையறிந்தால்அடைக்கும் விழி..விவாதத்தின் முடிவு ?..காற்றும் நுழையாநெருக்கத்தில்,பிரியவே விரும்பாவிருப்பத்தில்,காதலை உணர்த்தும்அவள்...காமத்தை உணர்த்தும்அவன்...விரல்களுக்குள் விரல்கள்,இதழ்களுக்குள் இதழ்கள்,விழிகளின் அரைகுறைபார்வைக்குள் உலகமே...!பிணைந்த கால்கள்,இணைந்த மையம்,மீள முடியாபரவசத்தில் இதயம்.காதலும்,காமமும்இணைந்தப் பின்பதில் எப்படி?கேள்வியே இல்லை...!காமம் இல்லாகாதலும் இல்லை...காதல் இல்லாகாமமும் இல்லை...
நண்பர்களே தோள் கொடுங்கள்...! விதிகளை மாற்றுவோம்.....நாம், நம் விதிமுறைகளையும் மாற்றுவோம்...............!
9/21/2012
பதிலில்லா கேள்வி
Subscribe to:
Post Comments (Atom)




No comments:
Post a Comment