2/27/2011

உன் விழியால்-5



என்
விழிவாசல்
வழியாக
வழிகிறது ஈரம்......
உன்னைப் பார்த்துக்
கண்
மூடாததால்......

2/14/2011

விடியாத இரவு............




விடியாத இரவு............



மேக தூறலின் சாரலில்,
பனிக்கால பருவக்குளிரில்,
அவனருகே அவளிருக்க,
அவளுக்கோ உடல்சிலிர்க்க,
தென்றலாய் வருடியது-காதல்....

பட்டாம்பூச்சியின் பட்டுச்
சிதறலால் - அதன்
சிறகிலிருந்து சிதறிய வண்ணம்,
அவள் கன்னத்தில் அழகாய் விழ-அதை
துடைக்கச் சென்றவனின்,
மூச்சு அரவணைப்பைத் தர
அவள் கண்களில் காட்சியில்லை......

நிலவின் ஒளியால் - அவள்
கண்களில் தூறல்கள் மின்ன,
அதைக் கண்ட அவன்
சிறகுகள் துடைக்கத்
துடிக்க,
முடியாது - அவன்
உணர்வுகள் தடைப்பட்டன....

காதல் தென்றல்
பலமாய் வீச - அவளின்
கூந்தல் காற்றில் மிதந்து
அவன் முகத்தை மறைக்க
முயன்று பார்த்தும்
முடியாமல் அவர்களின்
விரல்கள் தீண்டின .

உணர்வுகளை பகிர்ந்தவர்கள்
இன்று உணர்ச்சிகளை
பகிர்ந்தனர் - அவர்களின்
இதழ்கள் இணைய,
இடைவெளி குறைய,
முத்தச் சத்தம்
முடியாது நீள - நிலவும்
நாணப்பட்டது.....

நாணத்தின் முடிவாய்
நிலவும் முகிலின் பின்னே
ஒளிந்து கொண்டது.....
நிலவின்
தலைமறைவால்
விடியல் எட்டாது
தொடர்ந்தது,
விடியாத இரவாய்.......!

2/07/2011

பிரிவின் வலி

பிரிவை
உணர்ந்துவிட்டேன்....
எங்கோ நீ...
இங்கோ நான்...
உன் நினைவுகள்
மட்டும் எப்போதும்
என்னோடு...
நானே நினைக்கக்கூடாது
என்றாலும் இவ்வுள்ளம்
மறக்க விடுவதில்லை...
வார்த்தைகளை
பார்த்து பார்த்து
பயன்படுத்தியும்
பிரிந்து சென்றாயே...
என் பார்வையையும்
பறித்து சென்றாயே....
மாதத்திற்கு ஒருமுறை
நிலா இல்லா வானம்.
வாழ்க்கை முழுமைக்கும்
நீயில்லா நானும்....
நகங்கள் அதிகமானால்
வெட்டி விடுவோம்,
நட்பும் அதன்
வழியில் வந்து விடுமோ?
உன் விழி
தெரியாததால்-என்
வழி தெரியவில்லை.
உன் விழியால்
வழி தருவாயா?
இல்லை
வலி தருவாயா?

2/06/2011

நிலா பெண்...........

நீயே நிலவே!
நிலாவும்
உன் போலவே
பால்
வண்ணம்.....

நீ வளர்ந்து
தேய்வது அசுர
வளர்ச்சிக்கா?
ஒளிர்ந்து
அணைவது மீண்டும்
ஒளிர்வதற்கா?-இல்லை
என்னை ஒளியூட்டவா?

உன் கூந்தலின்
ஒற்றைக் கருமுடியில்
கண்டேன் நிலவின்
முதல் பிறையை...

உன் சித்திரத்தின்
வரைகோடு தான்
இரண்டாம் பிறையோ?

உன் காதுமடலின்
சிறிய வளைவுகளே
மூன்றாம் பிறையோ?

மூக்கின் விடைப்பான
இடமே நிலவின்
நான்காம் பிறையோ?

அழகிய முகத்தின்
கீழ் நாடியில்
காண்கிறேன்
ஐந்தாம் பிறையை....

பற்களால் கொஞ்சமாய்
கடிபடும் உன் மேல்உதடு
ஆறாம் பிறையாய்....

அதிகமாய் கடிபடும்
உன் கீழ்உதடு
ஏழாம் பிறையாய்....

விரல்களின் நீட்சியாய்
நிற்கும் உன் நகமே
எட்டாம் பிறையோ....

உன் இதழ்களை
நீ பிரிக்கும் போதெல்லாம்
நான் காண்கிறேன்
ஒன்பதாம் பிறையை....

நீ சுருக்கும்
புருவத்தின் மத்தியில்
பத்தாம் பிறையை
காண்கிறேன்....

சிரிக்கும் போது
உன் கன்னக்குழியில்
நான் காண்பது
பதினொன்றாம் பிறையை....

சிரித்தப்பின்
அழகான உன்
கன்னங்களை காண்கிறேன்
பன்னிரெண்டாம் பிறையை....

சேலையுடுத்தும் போது
இடப்பக்கமாய் தெரியும்
உன் இடையில்
காண்கிறேன்
பதிமூன்றாம் பிறையை...

ஆடை கொண்டு
மறைத்தாலும்
நான் மட்டுமே
காண்கிறேன்
பதினான்காம் பிறையை......

எழுதாத சித்திரமாய்,
திகட்டாத
தித்திப்பாய்,
புனையாத கவிதையாய்,
நான் காண்கிறேன்
உன் முகத்தில்
பதினைந்தாம் பிறையை....

என்னை மகிழ்விக்கும்
நேரமெல்லாம்
நீ என்
வளர்பிறையே!...

என்னோடு உறவாடும்
நேரமெல்லாம் நீ என்
தேய்பிறையே!...
நீயே நிலவே!
இல்லை உன்னில்
பல நிலவே!
என் காதல்
உறவே!

ஒரு அமாவாசையோடு
உறவாட வந்த
என் பௌர்ணமியே!....

உன் காதலை மிஞ்ச
என் காதலும் இல்லை....
இந்த உலகில் எவர்
காதலும் இல்லை!......

2/01/2011

நிலா பெண்.....


நிலவைத்
தொடுவதாகத் தான்
தோன்றுகிறது-உன்
நிழலைத்
தொடும்
போதெல்லாம்.....