உயிராகிப்போன
உறவே...!
உனை எப்பவும்
சுமப்பேன் இதயத்தில்,
தோழியாய் ,
தாயாய் ,
சகோதரியாய் - என்
உயிர்ப்பாய் ! - ஏன்
உன்னிடம் மட்டும்
இவ்வளவு பாசம் ?
என் கனவாய் நீ
இருப்பதாலா ? இல்லை
என் கரம்பிடித்து
அன்னையைப் போல்
வழி நடத்துவதாலா ?
கரு விழி கரைக்கிறேன்
நீ என்னை ஒதுக்குவதாய்
உணரும் போதே ,
உன் மடி தேடுகிறேன்
நீ என் விழி நீரை
ஏந்துவதற்கு !
தேவதையே ! - என்
இருள் நீக்கும்
ஒளியாய் எப்போதும்
எனக்கு நீ
தேவையே !
கோபமாகும் நேரமும்
சுகமாகிறது - உன்
குரல் என் செவியைச்
சேர்கையில் !
புதிது போல் உணருகிறேன்
உன்னாலே !
எழுதிக் கொண்டே
இருப்பேன் எப்போதும்
உன்னையே !
ஓர் நாள் உன்னை
அழ வைப்பேன்.
என்னால் அல்லது எனக்காக,
ஆனால் அதைக்
கண்டு அழ என்
கண்ணீர் நிச்சயம்
இருப்பினும் அப்போதும்
நீ அழக்கூடாதென்றே
விரும்புகிறேன் !
தேவதைகள் என்றும்
அழக்கூடாது - உன்
அழுகையின் ஒவ்வொரு
துளியிலும் என் கண்கள்
கலந்திருக்கும் என்பதை
உணர்ந்து கொள் !
உயிர் பிரிவு ஒரு நொடியே!
அதை யாரும் அறியா...
ஆனால் பெண்ணே
உன்னுடனான பிரிவின் நொடிக்கு
அந்த ஒரு நொடியே மேல் எனக்கு....!
என்,
கோபம் கரைக்கும்,
சோகம் துடைக்கும்,
தவறுகள் திருத்தும்,
திறமைகள் தூண்டும்,
பாசம் சேர்க்கும்,
அன்பு பொழியும்,
அக்கறை கூட்டும்,
அரவணைத்து வழிநடத்தும்,
என்னை மதிக்கும்,
நலமான நட்பே,
உனை தாய் என்று
சொன்னாலும்
சரியென்றே சொல்வாள்
என் தாயே....!



