ரெட்டை மாடு பூட்டி, வெட்ட வெளி போகையிலே, சுற்றி வீசும் தென்றலில், உச்சி குளிரும் வேளையெல்லாம், நீ குடுத்த ஒற்றை முத்தம் வந்து கன்னக்குழியில் நிக்குதடா...!!
ஆடை களையும் என் விருப்பம் அறிந்துதான் உன் மேனி ஆடையை சரிய விடுகிறதோ...? மோகப் பார்வையை தவிர்த்து நீ பூவை ரசித்தாலும் மோகம் தவறிடுமோ...? உன் வெட்கம் கண்டு உன் வெள்ளை உடை கூட சிவந்து நிற்பதை எண்ணி நானும் சிரிக்கிறேன்.. சிலிர்க்கிறேன்.. நம் காதல் போலே...!!!
வார்த்தைகளே இல்லாமல் நீ வழங்கிய வெற்றுப் புத்தகம் கூட எனை வேர்க்க வைக்குதடா... வேர்வையின் வாசம் அறிந்து வந்த பூனை கூட என் சுவாசம் கண்டு காதல் பார்வை பார்க்குதடா...