12/28/2010

தேநீர் காதல்


அவளை
தேநீர் அருந்த
அழைத்தேன்.
வந்தாள்....
நான் கொடுத்த
கோப்பையில்
நீரைக் கண்டு
முறைத்தாள்...
நான்
தேன் நீர்
அருந்த தானே
அழைத்தேன்?.......

8/28/2010

என் காதல்+நீ=என் காதலி


நிலா
சூரியன்
வானம்
பூமி
காற்று
கடவுள்
நீ
நான்
மற்றும்.....
நம் காதல்!...

8/27/2010

உன் விழியால்-4


பெண்ணே!
நீ ராணுவத்தில்
சேர்ந்திடு...
உன் விழியால்
ஆயுதச் செலவுகள்
மிச்சம்....!

8/17/2010

இனி ஒரு விதி செய்ய.........: உன் விழியால்-3

இனி ஒரு விதி செய்ய.........: உன் விழியால்-3

உன் விழியால்-3

என் விழி
எப்போதும்-உன்
விழியைத் தேடியே.....

உன் விழியால்-2

என் விழியில்
விழுந்தவள் நீயா.......?
உன் விழியால்
விழுந்தவனே நான்............!

உன் விழியால்-1


மை வைத்து
மனதை வசியம்
செய்வார்களாம்-எப்படியோ
தெரியவில்லை.... ஆனால்
உன் கரு விழியின்
மையினால் நான்
வசியமானது என்னவோ
உண்மை...........!

8/14/2010

நம் சுதந்திரம்.....!


அறுபத்து மூன்றில்-நம்
சுதந்திரம்- பசி,
மானம், இடம், உறவு
எல்லாம் விற்று பெற்ற
சுதந்திரம்!

கேவலமானவர்களின் வரலாறு,
கிசுகிசுக்கள், கிளுகிளுக்கள்,
இவையெல்லாம்
எழுத்துச் சுதந்திரமா?

அடுத்தவரைப் பற்றி அரட்டை,
உச்சபச்ச மேடை பேச்சுக்கள்,
புரணிகள், புகழாரம், விமர்சனங்கள்
இவையெல்லாம்
பேச்சுச் சுதந்திரமா?

ஆபாச படங்கள், வன்முறைகள்,
அசிங்கமான காதல்கள்,
கள்ளத்தனங்கள், காமங்கள்
இவையெல்லாம்
கலைத்துறைச் சுதந்திரமா?

ராத்திரி நடனங்கள்,
காமத்திற்கான நட்புகள்,
கடற்கரை காதல்கள்,
கவர்ச்சி உடைகள்
இவையெல்லாம் செய்ய
கேளிக்கைச் சுதந்திரமா?

ஆட்சி மாற்றவும்,
அதிகாரி மாற்றவும்,
அநியாயம் செய்யவும்,
அத்தனையும் சுருட்டவும்
பதவிச் சுதந்திரமா?

கல்வி என்ற பகல்கொள்ளை,
சிபாரிசு என்ற மின்சாரம்,
லஞ்சம் என்ற அட்டை,
ஊழல் என்ற பெருச்சாளி,
சாதி என்ற சாக்கடை,
மதம் என்ற கழிவுஓடை,
காதல் என்ற கள்ளத்தனம்,
தீவிரவாதம் என்ற சுனாமி,
இவையெல்லாம் தான்
சுதந்திரமா?.......இல்லை
ஒரு நாள் மட்டும்,
ஊர் கூடி ஏற்றப்படும்...
கொடிதான் சுதந்திரமா?

எதுவடா சுதந்திரம்...?

எதற்காக பெற்றோம்-இந்தச்
சுதந்திரம்?

அந்நியக் கலாச்சாரம்,
நம் கலாச்சாரத்தை அழித்திடக்
கூடாதென்றல்லவா பெற்றோம்
இச் சுதந்திரத்தை.....

அடிமையாய் நம்
கலாச்சாரத்தை காத்து நின்ற
நம் முன்னோர்கள்
எங்கே?
சுதந்திரம் என்று
கலாச்சாரத்தை விற்று விட்ட
நாம் எங்கே?...........

புலி பசித்தாலும்
புல்லைத் தின்னாது என்ற
வீரர்கள் எங்கே?
கண்டதையும் தின்னத்
தொடங்கியிருக்கும்
நாம் எங்கே?

இதற்காகவா பெற்றோம்
சுதந்திரம்...........?

இச்சுதந்திரம்
இருந்தால் என்ன?

...................... என்ன?

நீ எழுதுவது,
இப்படி பேசுவது எல்லாம்
இந்தச் சுதந்திரத்தினால் தான்
என்பார்கள்....... நிச்சயம் தான்.

ஆனால் இதற்கு முன்னும்
எழுதினோம்
பாரதியாய், பாரதி தாசனாய்....
பேசினோம்
காந்தியாய், நேருவாய்.....
காட்டினோம்
நாடகமாய், கூத்தாய்......

அவர்கள் இருந்திருந்தால்....?

அட போங்கடா.....
எதன் கையிலோ
எதையோ குடுத்த கதைதான் இது.................என்பார்கள்.

8/13/2010

தேடல்.....

இந்த உலகம் எப்போதும்
ஒன்றை தேடிக்கொண்டே
இருக்கிறது..... எதை
என்பது தெரியாமலே!......
தேடும் போது சுகமாகத்தான்
இருக்கிறது.... தேடிக்
கிடைத்ததப்பின் தான் வெறுக்கிறது......
வாழப் பிடிக்கிறது.... ஆனால்
வாழ்க்கை தான் பிடிக்கவில்லை....
நினைவுகளில் மூழ்கி
நிஜங்களை இழந்து...,
கனவுகளில் மூழ்கி
கடமைகளை மறந்து...,
எப்போதும் ஒன்றைத்
தேடிக் கொண்டே இருக்கிறோம்....
எதை என்பது தெரியாமலே.....!