9/23/2012

காதல்

வானவில்லை 
குழைத்து வந்து 
வண்ணம் 


தீட்டியதாரோ?

உன்னை 
வளைத்து நெளித்து 
வில்லாய் 
செதுக்கியதாரோ?

விண்மீன்களின் 
ஒளியைப் பறித்து 
உன் கண்ணில் 
செலுத்தியதாரோ?

வெண்மேகங்களின் 
குளிர்ச்சியை 
உன்னுள் 
நிரப்பியதாரோ?

தேன் கலந்தது 
போல் உன் 
குரலை இனிக்கச் 
செய்ததாரோ?

தேள் கொட்டியது 
போல் உனக்குப் 
பார்வையை 
கொடுத்ததாரோ?

வானமும், பூமியும் 
நீயென - என் 
ஒளியிலும், ஒலியிலும் 
நீயென்று - என் 
வாழ்விலும், சாவிலும் 
நீயே என்று - உன்னை 
படைத்ததாரோ?

12/07/2007 at 7.05 pm 


காதல்

உன்  இமையின்
மேல் நீலம் - போல்

என் இமையின்
உள் நீயும்

ஒட்டிக் கொண்டதன்
பொருள் ?

உன் இதழின்
மேல் புன்னகை - போல்

என் இதழின்
இடையே உன் பெயரும்

ஒட்டிக் கொண்டதன்
பொருள் ?

இமையாய் உனை
மூடிடவும் ,

புன்னகையாய் உன்
சந்தோஷத்தில்
நிற்கவும்,
நிலைக்கவும்...

நீ புரிந்து கொள்ளவே
புலம்புகிறேன்...

புரியாதவளே !...

07/01/2007 at 3.30pm 



நிலா

 இருளில்

உன்

பிம்பம்

தெரிவதில்லை

கண்ணாடியில்

பதிலாக

வானில் !...

நட்சத்திரம்

பெண்ணே !

உன்

நெற்றிப்  பொட்டை

ஒட்டி  வைக்க

வேறு  இடமில்லையோ ?

வானம் .




 

எங்கேயும்... எப்போதும்...

ஒவ்வொரு

நிறுத்தத்திலும்

சிலப்  பூக்களை

உதிர்த்து செல்கிறது

கல்லூரிப்

பேருந்துகள்....

9/22/2012

என் தோழி

 இயற்கையின் 
கலப்பிடமே! - நீ 
உலக மொழிகளின் 
திரைப்படமே !

அனைத்தும் கற்பிக்கும் 
கல்விக் கூடமே!
எனக்கு உனைவிட்டால் 
வேறில்லை போக்கிடமே!

அழகு குவிந்த 
பூந்தோட்டமே!
திருவிழாத் 
தேரோட்டமே!
உனக்காய் 
நான் செய்வேன் பெரிய 
போராட்டமே!

பன்னிரு உயிரே,
பதினெட்டு மெய்யே!
உனைச் சரியாய் தொகுப்பவன் 
கவிஞனே!

சுழலும் காலமே!
உதிக்கும் சூரியனே!
உதிர்வது என்னவோ
 என் மனமே! 

உயிரான 
ஓவியமே!
உனைத் தந்தால் 
அது காவியமே!

பூக்காத பூக்களுமே 
உனைப் பார்த்ததும் 
பூத்திடுமே!
திகட்டாத
தித்திப்பே!

இவையாவும் 
எனக்கு தோன்றியதல்ல 
உனைப் பார்ப்பவர்க்குத் 
தோன்றுபவை!

அன்னமிட்டு 
அன்னை போல் 
உயர்ந்தவளே!
இவை சொல்வது 
எனைச் சேர்வதற்கல்ல!
பின்ன எதற்கு 
என்கிறாயா ?
தோன்றியது சொல்கிறேன்.

தோன்றியதை 
மனசுக்குள்ளே 
வைத்துக் கொள்ள 
வேண்டியது தானே 
எதற்குச் சொல்கிறாய் 
என்கிறாயா ?
நான் சொல்லவில்லை 
என்றால் உன் பெருமையை 
யார் சொல்வது?

அழகு ஆபத்து தான் !
உன் அழகு,
எனக்கு ஆபத்து...
ஆம் விடியற்பொழுதில் 
பிரிவோம் அல்லவா ?

என்னைப் பற்றி 
என்ன தெரியும் 
என்கிறாயா ?
தெரியும், பசிக்கு 
உணவளித்த போதே!
இதற்கு மேல் 
தெரிய வேண்டிய 
அவசியமும் இல்லை!

காதல் எதுவும் 
வேண்டாம் - அதற்கு 
தகுதியும் இல்லை 
எனக்கு - ஒரு 
நட்பை உருவாக்கு 
என்பதற்கே 
இத்தனை மன்றாடுகள்!

தொடர்வாய் 
என்ற நம்பிக்கையுடன் 
காத்திருக்கும் 
நண்பன்....
என்றுமே....

காதல்

 விடியல்
கேட்டால்

விழி
தருகிறாய்...

தனிமை  கேட்டால்

விரல்  தருகிறாய்...

ஜனனம்  கேட்டால்

மடி  தருகிறாய்...

மரணம்  கேட்டால்

உன்னைத்  தருகிறாய்...

காதல்
கேட்டால்

என்ன
தருவாய் ?...

காதல்

 பார்வை திறப்பின் வழி,

திறப்பு புன்னகையின் வழி,

புன்னகை மொழிதலின் வழி,

மொழிதல் புரிதலின் வழி,

புரிதல் உறவின் வழி,

உறவு உயிர்க்கு வழி,

உயிர் முழுமைக்கு வழி,

முழுமை காதலுக்கு வழி,

அதனாலே,

பார்த்து,

  சிரித்து,

      பேசி,

          புரிந்து,

              உறவாடி,

                   உயிராகி,

                         காதலாகி,

எனை முழுமையாக்கு

பெண்ணே !

9/21/2012

பதிலில்லா கேள்வி

மார்கழி குளிரில்,
அந்தி தொடக்கத்தில்,
இரவின் நீட்சியில், 
பஞ்சனையின் மீது
காதலாய் , காமமாய்
யார் அவர்கள் ?

காதலின் மகளான அவளும்;
காமத்தின் மகனான
அவனும்;
விரல் தொட்டு,
 இதழ் பதித்து
அவள் பெயரை
அவன் உச்சரிக்க,
அயரும்  தூக்கத்தில்,
அவளின்  சிணுங்கல்
மழைச் சாரலின்
பரவசம்.  

இதழும்  இதழும்
இணையத்  துடிக்க,
இடையும்  இடையும்
இணையா நெருக்கத்தில்,
மார்புச் சூட்டின்
வெப்பம் மிதமாய் பரவி,
குளிரையும் சங்கடப்படுத்த,
இரவுக்கும் மயக்கம்,
எல்லாம்  ஒரு விதக்
கிறக்கம்.  

இந்நேரத்திலும்
ஒரு  விவாதம்..
சத்தமில்லா
ஒரு சண்டை..
பனியிலும்
ஒரு பனிப்போர்..  
காதலின் முடிவில்
காமமா ?
காமத்தின் முடிவில்
காதலா ?
விடையறியாமல்
விழிக்கும் விழி..
விடையறிந்தால்
அடைக்கும் விழி..
விவாதத்தின் முடிவு ?..  

காற்றும் நுழையா
நெருக்கத்தில்,
பிரியவே விரும்பா
விருப்பத்தில்,
காதலை உணர்த்தும்
அவள்...
காமத்தை உணர்த்தும்
அவன்...  

விரல்களுக்குள் விரல்கள்,
இதழ்களுக்குள் இதழ்கள்,
விழிகளின் அரைகுறை
பார்வைக்குள் உலகமே...!  

குளிரைப்போக்கும் மார்பு,
பிணைந்த கால்கள்,
இணைந்த மையம்,
மீள முடியா
பரவசத்தில் இதயம்.
காதலும்,காமமும்
இணைந்தப் பின்
பதில் எப்படி?
கேள்வியே இல்லை...!  

காமம் இல்லா
காதலும் இல்லை...
காதல் இல்லா
காமமும் இல்லை...

எங்கேயும்... எப்போதும்...



பேருந்து

     என்றாலும் சரி..

   புகைவண்டி

என்றாலும் சரி..

ஜன்னலோர

இருக்கைகள்

கொடுத்து வைத்தவை !...

9/20/2012

இயற்கை







அரைகுறையாய்

கவர்ந்திழுக்கும்


எதுவும் - தன்

நிர்வாணத்தால்

மகிழ்விப்பதில்லை!..

9/18/2012

சரியா தோழி......?

செல்வத்தின் ராணியே !

தனத்தின் அரசியே !



காற்றிடம் ஒரு

செய்தி சொல்லி

அனுப்பினேன் ,

 
வந்ததா ? - காட்டுக்

குருவியிடமும் கூறினேன்

கூவியதா ? - பகல்


முகிலிடமும் , நேற்றிரவு


நட்சத்திரத்திடமும் கூட

கூறினேன் செய்தி

வந்ததா ????



காதலென்றால் மட்டும்

போர்க்கால நடவடிக்கையில்

ஈடுபடுகின்றன.... நட்பு

என்றால்...? - நம்

மத்திய அரசாய்

மாறி விடுகின்றன.....



எதையும்

சம்பாதிக்கவில்லை எனினும்

 
பெருமை கொள்கிறேன்

உங்கள் போன்ற

நட்பை சம்பாதித்திருக்கிறேன்

எனும் போது....!

 



 
அக்கறை எவ்வளவு இனிமை...?

உன் என் மீதான

நம்பிக்கை எவ்வளவு

அன்பு.....?



காற்றையும், காட்டுக்குருவியையும்,

வான் முகிலையும், எண்ணற்ற

நட்சத்திரங்களையும்

அனுப்பினேன் உங்களிடம்

செய்தி சொல்ல - ஆனால்

இப்பொழுது நான்

அவைகளுக்கு ஒரு

செய்தி சொல்கிறேன்.



காதலில் தூது

பலிக்கவில்லை

என்றால் கோபமும்

பிரிவும் தான் - ஆனால்

எங்கள் நட்பில் தூதுகள்

பலிக்கவில்லை என்றாலும்

அறிந்து கொள்வோம்

எங்கள் செய்திகளை.....

சந்தேகம் என்றால்

கேளுங்கள் என்

தோழியை.....! - என்ன

தோழி சரிதானே......?

9/03/2012

மறந்தேன் தான்...... ஆனால் மறுக்கவில்லை.....

இந்த உலகம்
சொல்கிறது நான்
தோல்விகாகவே
பிறந்தவன் என்று...
ஏன்? என் மனம்
உட்பட.... ஆனால்
இல்லை என்று
உணரும் தருணம்
சந்தோஷத்தை தவிர
வேற என்ன வரும்.....?    

     

 இனிய பகிர்தல்களை
மறந்தேன் என்றாலும்
மறுக்கவில்லை.....
இந்த உலகமும்
ஏன்? எல்லா
உள்ளங்களும்
அன்பிற்காகவே
இயங்குகின்றன.....
அந்த அன்பை
உணரும் தருணம்
சந்தோஷத்தை தவிர
வேற என்ன வரும்....? 

 

 தாய்யோ, தந்தையோ,
சகோதரனோ, சகோதரியோ,
தோழனோ, தோழியோ,
எல்லாம் அன்பிலே...
பகிர்ந்த அன்பை
மறந்தேன் என்றாலும்
திரும்ப கிடைத்திருக்கிறது என்று
உணரும் தருணம்
சந்தோஷத்தை தவிர
வேறென்ன வரும்........? 

 

நான் தோல்விக்காக
பிறந்தவன் அல்ல
அன்பால் நல்ல நட்பை
வென்றிருக்கிறேன் என்று
உணரும் தருணம்
சந்தோஷத்தை தவிர
வேறென்ன வரும்......?

 

நல்ல தோழியே
நன்றிகள் பல
உனக்கு..... நீ
தரும் உற்சாகம்
என்னை வெற்றி
பெற வைக்கும் என்று
உணரும் தருணம்
சந்தோஷத்தை தவிர
வேறென்ன வரும்.....?

வேறென்ன வரும்.....?

சந்தோஷம் தானே.....?