9/18/2012

சரியா தோழி......?

செல்வத்தின் ராணியே !

தனத்தின் அரசியே !



காற்றிடம் ஒரு

செய்தி சொல்லி

அனுப்பினேன் ,

 
வந்ததா ? - காட்டுக்

குருவியிடமும் கூறினேன்

கூவியதா ? - பகல்


முகிலிடமும் , நேற்றிரவு


நட்சத்திரத்திடமும் கூட

கூறினேன் செய்தி

வந்ததா ????



காதலென்றால் மட்டும்

போர்க்கால நடவடிக்கையில்

ஈடுபடுகின்றன.... நட்பு

என்றால்...? - நம்

மத்திய அரசாய்

மாறி விடுகின்றன.....



எதையும்

சம்பாதிக்கவில்லை எனினும்

 
பெருமை கொள்கிறேன்

உங்கள் போன்ற

நட்பை சம்பாதித்திருக்கிறேன்

எனும் போது....!

 



 
அக்கறை எவ்வளவு இனிமை...?

உன் என் மீதான

நம்பிக்கை எவ்வளவு

அன்பு.....?



காற்றையும், காட்டுக்குருவியையும்,

வான் முகிலையும், எண்ணற்ற

நட்சத்திரங்களையும்

அனுப்பினேன் உங்களிடம்

செய்தி சொல்ல - ஆனால்

இப்பொழுது நான்

அவைகளுக்கு ஒரு

செய்தி சொல்கிறேன்.



காதலில் தூது

பலிக்கவில்லை

என்றால் கோபமும்

பிரிவும் தான் - ஆனால்

எங்கள் நட்பில் தூதுகள்

பலிக்கவில்லை என்றாலும்

அறிந்து கொள்வோம்

எங்கள் செய்திகளை.....

சந்தேகம் என்றால்

கேளுங்கள் என்

தோழியை.....! - என்ன

தோழி சரிதானே......?