1/11/2011

நிமிடங்களை கடந்து...




நிமிடங்களாய்
கரைகிறாய்,
யுகங்களாய்
நீளுகிறாய்,
அலைகள் போல்
ஆர்ப்பரிக்கிறாய்,
கடலாய் என்னை
இழுத்துச் செல்கிறாய்,
எத்தனையோ கனவுகள்
கடவுளைக் கண்டது போல்!
அத்தனையிலும் நீயே
என் கடவுளாய்!...

கவியாய் எனைக்
குறைத்து,
உளியால் எனைச்
செதுக்கி,
தூரிகையால் எனை
வண்ணமாக்கி,
இசையாய் எனை
உருக்கி-பெண்ணே
உன் எண்ணம் தான் என்ன?...

நீ
கவியா?
சிலையா?
ஓவியமா?
இல்லை இசையா?...
எழுந்தே நிற்கிறாய்
மிகப் பிரமாண்டமாய்,
படர்ந்தே இருக்கிறாய்
மிக ஆச்சர்யமாய்...


அழகே,
உனக்கான நேரம்
இதுவென்று
ஒதுக்க முடிந்த
என்னால்
அந்நேரம் தவிர
மீதி நேரமெல்லாம்
உன்னை
நினையாதிருக்க
முடியுமோ?...