5/02/2011

அர்ச்சனை.....


பார்த்தாலே பற்றிகொள்கிறது நெருப்பு...
பார்க்காமலே பற்றவைக்கிறது அவள் நினைப்பு.....
எங்கும்.... எப்போதும்.... அவள் முகம்
சூரியனாய்.... இரவிலோ நிலவாய்.....
இது ஒரு புது மாற்றம்...
மனதிலோ ஒரு தடுமாற்றம்.....
செய்கிறாய் எப்போதும் விழிமாற்றம்......
கண்களா அப்பப்பா.....
கரைந்து விடுகிறேன்.... உன்னிலா?....
இல்லை இந்த மண்ணிலா?....
ஓவியம் வரைய மாட்டான் - உன்னைப்
பார்க்கும் எந்த ஓவியனும்.....
பாடல் இசைந்திட மாட்டான் - உன்னைப்
பார்க்கும் எந்த ஒரு இசைஞனும்....
இப்படியே நகர்கிறது எல்லாத்தருணமும்...
என் கவிதைகளால்..... உன்னை
அர்ச்சித்தப்படியே!..................