11/01/2012

என் தோழி

என் நினைவுகளில் 
இப்போது 
தவிர்க்க இயலாத 
ஞாபகம் நீ..
இறப்பு நிச்சயம்,
வாழும் நாளை 
சந்தோசமாய் வாழ்  
என்பது போல் தான் 
எனக்கும் - ஆம் 
இழப்பு என்பது 
நிச்சயம் எனினும் 
நீ இருக்கும் காலம் 
என் அருகாமையில்,
இதில் எதுவும் 
இல்லை... எதுவுமே 
இல்லை.. அன்பைத் தவிர....

உன்னைப் 
புரிந்து கொள்ளாமல் 
முட்டாளை இருக்கவும்  
விரும்பவில்லை...
புரிந்து கொண்டு 
புத்திசாலியாகவும் இருக்க 
விரும்பவில்லை...

நான் 
நானாகவே இருக்க 
விரும்புகிறேன்...

நதியின் 
சுழற்சியில் சிக்காமல் 
தப்பிப்பவன் 
புத்திசாலி என்றால் 
நான் முட்டாளாகவே 
இருக்கிறேன்...

விருப்பங்கள் 
எப்போதும் நிகழ்வுகளாக 
மாறுவதில்லை...
நிகழ்வன  எவையும் 
விரும்பியவையாகவும் 
இருப்பதில்லை...

விழ கூடாது என தான் 
எழுகிறேன்-ஒவ்வொரு 
முறை விழும் போதும்.

தானாய் நிகழும் 
பிரிவுகள்,
வரமா ? சாபமா ?
பிரித்துப் பிரித்து 
பார்க்கிறேன்,
விளங்கிக் கொள்ளதான் 
முடியவில்லை...

சரியும் தவறும் 
நாம் புரிந்து 
கொள்ளும் விதத்தில் 
தானே தவிர,
நிகழும் 
நிகழ்வில் அல்ல...

10/30/2012

அவள்

                          

                              தொட்டுப்

 
                              பார்க்கிறேன் என்று,

 
                              வெட்கப்பட

 
                              வைத்து விட்டாயே...!!!

காதல்

பூமியின் 
வெப்பச் சலனத்தால் 
கொந்தளிக்கும் 
கடல் தான் 
உதாரணம்...

ஏக்கத்தின் 
வெப்பச் சலனத்தால் 
கொந்தளிக்கும் 
என் காதலுக்கு...

விரைந்து வா,
சாந்தப்படுத்த... 


காதல்


ஒரு விரல் 
நீ...
மறுவிரல் 
நான்...
எத்தனை 
இடைவெளி 
வந்தாலும் 
பிரிவே இன்றி 
இணைத்தே
 வைத்திருக்கும் 
கை - நம் 
காதல்...!!!

அவளும் நானும்


அவளும்  நானும்,
 
வானும் நிலவும்,
 
காற்றும் மழையும்,
 
பூவும் வண்டும்,
 
குழந்தையும் மகிழ்ச்சியும்,
 
குமரியும் வெட்கமும்,
 
காதலும் காமமும்,
 
அவளும் நானும்,
 
நானும் அவளும்...

காதல்

சுற்றிலும் வெள்ளை
 
நடுவிலே மஞ்சள்,

 
பூ...

 
சுற்றிலும் நீ

 
நடுவிலே நான்,

 
காதல்...

அவள்


வெள்ளை நிறம்
உனக்குப் பிடிக்குமென
அறிந்து கடல் கூட
நீ ரசிக்கும் போது
வெள்ளையாய் காட்சி

தருகிறதோ...!!!
 
காதல்...!!!
 
வெள்ளையின் மீது
உனக்கும்..
உன் மீது
கடலுக்கும்..

அவள்




மெல்லிதழ் பூவை,

சுற்றி அலங்கரித்து...
 

நெருஞ்சி முள்ளை
 

மட்டும் மத்தியில்
 

வைத்ததாரோ...???

காதல்


காதலிக்கும் முன்பு
 
வரை நன்றாகத்தான்
 
இருந்தேன்...
 
எல்லாம் இந்த
 
காதல் படுத்தும்
 
பாடு...!!

முத்தம்

ரெட்டை மாடு
பூட்டி,

 
வெட்ட வெளி
போகையிலே,

 
சுற்றி வீசும்

தென்றலில்,

 
உச்சி குளிரும்
வேளையெல்லாம்,

 
நீ குடுத்த
ஒற்றை முத்தம் வந்து
கன்னக்குழியில்
நிக்குதடா...!!

நிலாப் பெண்...

 
 
பூவை
நுகர்கிறாயோ...?
மக்குப் பெண்ணே,
உன்னை ஏமாற்றி
அது உன் வாசம்
முழுவதையும்
தனதாக்கிக்
கொண்டிருக்கிறது.....

நிலாப் பெண்...

ஆடை களையும் என்
விருப்பம் அறிந்துதான்
உன் மேனி ஆடையை
சரிய விடுகிறதோ...?

 
மோகப் பார்வையை

தவிர்த்து நீ பூவை
ரசித்தாலும் மோகம்
தவறிடுமோ...?

 
உன் வெட்கம் கண்டு
உன் வெள்ளை உடை
கூட சிவந்து
நிற்பதை எண்ணி
நானும் சிரிக்கிறேன்..
சிலிர்க்கிறேன்.. நம்
காதல் போலே...!!!

நிலாப் பெண்...

 
கொடியிடை
மலர்களில்
தலை சாய்த்து,
மயிலிறகால்
தலை கோதிய படி,
இரு இமயத்தின்
மத்தியில்,
புன்னகைச்
சூரியனை
காண்பது
ஆயுள் சுகமே...!

நிலா பெண்...

வாசல்
வரை வந்து
கையசைத்து
உன் எல்லை
இதுவரை என

பிரிகிறாய்...
தோழனே..!!
உன் மீது
என் காதலுக்கு
எல்லையே
இல்லையென
நான் எப்படி
புரிய வைப்பேன்...

நிலா பெண்...

வார்த்தைகளே
 
இல்லாமல் நீ

 
வழங்கிய

 
வெற்றுப் புத்தகம் கூட

 
எனை வேர்க்க

 
வைக்குதடா...

நிலா பெண்...

 ஆடை கூட
பாரமாகிப் போனது.,
உன் காதலால்
நீ எனை மிதக்க
வைத்துக் கொண்டிருப்பதால்..,

நிலா பெண்...

வார்த்தைகளே
இல்லாமல் நீ
வழங்கிய
வெற்றுப் புத்தகம் கூட
எனை வேர்க்க

வைக்குதடா...
வேர்வையின்
வாசம் அறிந்து
வந்த பூனை கூட
என் சுவாசம் கண்டு
காதல் பார்வை
பார்க்குதடா...



10/13/2012

என் தோழி

நீ  சத்தமாய் 
சொல்லியே  எனைச் 
சட்டத்துக்குள் 
நிறுத்துகிறாய் 
மீளாதபடி .....

உன் 
கட்டளையை 
சட்டத்திற்குள் நின்றே 
வெற்றி பெற 
முட்டிக் கொண்டிருக்க,
நம் நட்போ 
முட்டிப் போட்டு 
சிரித்துக் கொண்டிருக்கிறது...

எத்தனையோ 
நட்பு , எனை 
ஏற்றுக்  கொண்டிருந்தது 
மாற்றமின்றி...

நீயும் அப்படியே 
ஏற்றுக் கொண்டாய் தான்,
மாற்றம் ஏதும் 
சொல்லாமலே ஆனாலும் 
மாற்றிக் கொண்டிருக்கிறாய்...!

அப்படியே தான் 
 நம் நட்பும் 
மாறிக் கொண்டிருக்கிறது 
வானவில்லிலிருந்து 
வானமாய் ....!

உன் இரவு
என் பகலாய்,
என் இரவு 
உன் பகலாய்,
நம் நட்பு 
இரவும் பகலுமாய்...
நானோ பரவசமாய்...

எலிச் சிரிப்பு,
நான் சிரிக்க..
எதற்கும் ம் ம் ம் ,
நான் வெறுக்க..
எகத்தாளப் பேச்சு,
நான் அடங்க..
அலட்சியப் போக்கு,
நான் வருந்த..
உன் அன்போ,
நான் வியக்க..
உன் குரல்,
நான் விரும்ப..
உன் முழியோ,
நான் ரசிக்க..
உன் அக்கறை,
இரு புறம் மோதினாலும் 
அடங்கி போகும் 
இரு கரையே...
 
செல்வ ராணி,
உன் செல்வம்
உன் அன்பு 
நீ அன்பின் ராணி..
என் நட்பின் 
ராணியும் கூட...

 நட்பே ,
இனி கோபப்பட்டால் 
அவகாசம் கொடுத்துக் 
கோபப்படு - அப்பதானே 
உனக்கான 
வரிகளைத் தந்து 
சமாதனம் செய்ய இயலும்..?

யாரும் யாருக்கும் 
இணை இல்லை,
அப்படியிருக்க ,
என் பிரிந்த நட்பு 
எப்படி இணையாகும் 
இன்று மலர்ந்த 
நட்புக்கு..?
எனக்கும் தெரியும் 
இருந்தும் என்ன செய்ய 
உன் அவசர கோபத்துக்கு...?

இங்கு எல்லாமே 
சாத்தியம் எனும்போது,
நம் நட்பில் 
கோபமும், சமாதானமும் 
சாத்தியம்தானே...?!
கோபப்படு அதிகமாகவே 
என் மீது மட்டும்,
நம் நட்பு மீதல்ல...!

இதற்கு நான் 
தகுதி இல்லை எனச் 
சொல்வாய் - அப்படிச் 
சொல்வது கூட 
தகுதி தானே...?

என் நட்பே !

நட்பான தோழியே !