2/06/2011

நிலா பெண்...........

நீயே நிலவே!
நிலாவும்
உன் போலவே
பால்
வண்ணம்.....

நீ வளர்ந்து
தேய்வது அசுர
வளர்ச்சிக்கா?
ஒளிர்ந்து
அணைவது மீண்டும்
ஒளிர்வதற்கா?-இல்லை
என்னை ஒளியூட்டவா?

உன் கூந்தலின்
ஒற்றைக் கருமுடியில்
கண்டேன் நிலவின்
முதல் பிறையை...

உன் சித்திரத்தின்
வரைகோடு தான்
இரண்டாம் பிறையோ?

உன் காதுமடலின்
சிறிய வளைவுகளே
மூன்றாம் பிறையோ?

மூக்கின் விடைப்பான
இடமே நிலவின்
நான்காம் பிறையோ?

அழகிய முகத்தின்
கீழ் நாடியில்
காண்கிறேன்
ஐந்தாம் பிறையை....

பற்களால் கொஞ்சமாய்
கடிபடும் உன் மேல்உதடு
ஆறாம் பிறையாய்....

அதிகமாய் கடிபடும்
உன் கீழ்உதடு
ஏழாம் பிறையாய்....

விரல்களின் நீட்சியாய்
நிற்கும் உன் நகமே
எட்டாம் பிறையோ....

உன் இதழ்களை
நீ பிரிக்கும் போதெல்லாம்
நான் காண்கிறேன்
ஒன்பதாம் பிறையை....

நீ சுருக்கும்
புருவத்தின் மத்தியில்
பத்தாம் பிறையை
காண்கிறேன்....

சிரிக்கும் போது
உன் கன்னக்குழியில்
நான் காண்பது
பதினொன்றாம் பிறையை....

சிரித்தப்பின்
அழகான உன்
கன்னங்களை காண்கிறேன்
பன்னிரெண்டாம் பிறையை....

சேலையுடுத்தும் போது
இடப்பக்கமாய் தெரியும்
உன் இடையில்
காண்கிறேன்
பதிமூன்றாம் பிறையை...

ஆடை கொண்டு
மறைத்தாலும்
நான் மட்டுமே
காண்கிறேன்
பதினான்காம் பிறையை......

எழுதாத சித்திரமாய்,
திகட்டாத
தித்திப்பாய்,
புனையாத கவிதையாய்,
நான் காண்கிறேன்
உன் முகத்தில்
பதினைந்தாம் பிறையை....

என்னை மகிழ்விக்கும்
நேரமெல்லாம்
நீ என்
வளர்பிறையே!...

என்னோடு உறவாடும்
நேரமெல்லாம் நீ என்
தேய்பிறையே!...
நீயே நிலவே!
இல்லை உன்னில்
பல நிலவே!
என் காதல்
உறவே!

ஒரு அமாவாசையோடு
உறவாட வந்த
என் பௌர்ணமியே!....

உன் காதலை மிஞ்ச
என் காதலும் இல்லை....
இந்த உலகில் எவர்
காதலும் இல்லை!......

2 comments:

  1. *****MANY MORE HAPPY RETURNS OF THE DAY*****
    to my nila...............

    ReplyDelete
  2. Belated bwishes from my end..
    அணு அணுவாக ரசித்து எழுதப்பட்ட கவிதை..! உங்கள் நிலாவைக் கண்முன் நிறுத்துகிறது. உங்கள் காதலையும்..
    வளர்பிறை போல் உங்கள் காதலும் வளர்ந்து வாழ்ந்துவர வாழ்த்துகள்..!

    ReplyDelete