4/15/2014

சமூகத்தில் காதல்

ஒரு
தருணத்தில்
மதில் மத்தி நின்ற
பூனை ...

மற்றொரு
தருணத்தில்
மதில் மிதித்தின்ற
யானை ...

எத்துனை,
எத்துனை
உருவங்கள் இப்
பாழாய்ப்  போன
காதலில் ...?

மாறிவிடுகின்ற
உருவங்கள் தான்
சுயநலத்தில்...

மாறாது நிலைத்திடுது
மதி
கலங்காதிடத்தில்...

காதல்
இரு முனைக்
கத்தி...

காதல்
இரு முனைக்
கத்தி...

கை ஆள தேவை
பெரும் உத்தி...

9/06/2013

அவளோடு நானிருந்த காலம் ....

என் பார்வைக்குள் 
நான் ஒன்று 
ஒளித்து வைத்திருக்கிறேன் 
என்னவென சொல் 
என்றாய்.. 

அடடா...! 
என் இதயம் 
என்னிடமில்லையே என்றேன்..
ஆமாம்...! என்பதாய் 
விழித்தாய்..!

அடிப் பெண்ணே...
நீ எங்கே நிற்கிறாய் 
என பார்த்தாயா? என்றேன் 
ஒரே இருட்டாக 
இருக்கிறது என்றாய்.

நீயிருந்துமா ? என்றேன்.
செல்ல சிணுங்களோடு எங்கே 
இருக்கிறேன் சொல்லுங்களேன் என 
நெஞ்சில் இடித்தாய்...

நீயே பார் என கண்களை 
காட்டினேன் ...

பார்த்ததும் குளிர்ந்து விட்டாயோ?
கண்கள் குளிர்ச்சியாக 
இருக்கிறது என்றேன்...

இல்லை ,
சூடாக இருக்கிறேன் என்றாய்...
ஏன்? என் கண்களுக்குள் 
உன்னை வைத்தது 
பிடிக்கவில்லையா ...?

இல்லையடா  மடையா ...! 
நெஞ்சுக்குள் வைத்திருந்தால் 
எப்பொழுதும் சாய்ந்து 
கொள்வேன் அல்லவா ..?
என்றாய்...

இவ்வளவு தானா?

செல்லமே..!
என் இதயத்துடிப்பால் 
இரவில் உன் தூக்கம் 
கெடும் அல்லவா ?
அதுமட்டுமல்ல 
கண்ணில் வைத்ததால் 
நான்  பெரிய பாக்கியசாலி 
தெரியுமா? என்றேன்...

எப்படி? எப்படி?
எப்படி? என்றாய்...
அவசரமாய்...

பொறுமையாய் கேள் 
சொல்லுகிறேன் என்றேன்...
அதற்கும் சிணுங்கலாய்  
சொல்லுடா என்றாய்...

உனக்காய் காற்றுவீசும் 
சாமரங்கள் என் இமைகள்..!
ம்ஹூம்...

என் பார்வை எப்பொழுதும் 
உன் மீதே..!
ம்ஹூம்...

இரவிலும் 
என் முன் நீயே...!
ம்ஹூம்...

ஆனந்தக்கண்ணீர் கூட 
வருவதில்லை நீயிருப்பதால்...!
பேச்சில்லை உன்னிடம்... 

இவற்றை விட முக்கியமான 
ஒன்று... எப்பொழுதும் 
உன்னை அணைத்திருப்பேனே...!
சொல்லி முடிப்பதற்குள் 
உன்னைக் காணவில்லை...?

எங்கே...? அட என் 
கால்களில்,

தேவதையே...!
இது காலில் 
விழும் நேரமல்ல 
காதலில் விழும் 
நேரமென உன்னை 
அணைக்க வந்த என்னை 
முடியாது போடா 
பொறுக்கியென  
தள்ளிவிட்டு 
ஓடுகிறாயே...!

பட்டாம்பூச்சி 
பறப்பது போலே...!

14-05-2006 @ 10.45 PM

11/01/2012

என் தோழி

என் நினைவுகளில் 
இப்போது 
தவிர்க்க இயலாத 
ஞாபகம் நீ..
இறப்பு நிச்சயம்,
வாழும் நாளை 
சந்தோசமாய் வாழ்  
என்பது போல் தான் 
எனக்கும் - ஆம் 
இழப்பு என்பது 
நிச்சயம் எனினும் 
நீ இருக்கும் காலம் 
என் அருகாமையில்,
இதில் எதுவும் 
இல்லை... எதுவுமே 
இல்லை.. அன்பைத் தவிர....

உன்னைப் 
புரிந்து கொள்ளாமல் 
முட்டாளை இருக்கவும்  
விரும்பவில்லை...
புரிந்து கொண்டு 
புத்திசாலியாகவும் இருக்க 
விரும்பவில்லை...

நான் 
நானாகவே இருக்க 
விரும்புகிறேன்...

நதியின் 
சுழற்சியில் சிக்காமல் 
தப்பிப்பவன் 
புத்திசாலி என்றால் 
நான் முட்டாளாகவே 
இருக்கிறேன்...

விருப்பங்கள் 
எப்போதும் நிகழ்வுகளாக 
மாறுவதில்லை...
நிகழ்வன  எவையும் 
விரும்பியவையாகவும் 
இருப்பதில்லை...

விழ கூடாது என தான் 
எழுகிறேன்-ஒவ்வொரு 
முறை விழும் போதும்.

தானாய் நிகழும் 
பிரிவுகள்,
வரமா ? சாபமா ?
பிரித்துப் பிரித்து 
பார்க்கிறேன்,
விளங்கிக் கொள்ளதான் 
முடியவில்லை...

சரியும் தவறும் 
நாம் புரிந்து 
கொள்ளும் விதத்தில் 
தானே தவிர,
நிகழும் 
நிகழ்வில் அல்ல...

10/30/2012

அவள்

                          

                              தொட்டுப்

 
                              பார்க்கிறேன் என்று,

 
                              வெட்கப்பட

 
                              வைத்து விட்டாயே...!!!

காதல்

பூமியின் 
வெப்பச் சலனத்தால் 
கொந்தளிக்கும் 
கடல் தான் 
உதாரணம்...

ஏக்கத்தின் 
வெப்பச் சலனத்தால் 
கொந்தளிக்கும் 
என் காதலுக்கு...

விரைந்து வா,
சாந்தப்படுத்த... 


காதல்


ஒரு விரல் 
நீ...
மறுவிரல் 
நான்...
எத்தனை 
இடைவெளி 
வந்தாலும் 
பிரிவே இன்றி 
இணைத்தே
 வைத்திருக்கும் 
கை - நம் 
காதல்...!!!

அவளும் நானும்


அவளும்  நானும்,
 
வானும் நிலவும்,
 
காற்றும் மழையும்,
 
பூவும் வண்டும்,
 
குழந்தையும் மகிழ்ச்சியும்,
 
குமரியும் வெட்கமும்,
 
காதலும் காமமும்,
 
அவளும் நானும்,
 
நானும் அவளும்...